Hot Posts

6/recent/ticker-posts

தாய்லாந்து தூதர் ஜனாதிபதி சந்திப்பு


இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் பைடூன் மகபன்னபொன்( Paitoon Mahapannaporn)இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியிட்டதற்கு வாழ்த்து தெரிவித்த தாய்லாந்து தூதுவர்,  தாய்லாந்து நாட்டு மன்னர் வஜிரலோங்கொன் அனுப்பிய விசேட வாழ்த்துச் செய்தியையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்தார்.

இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையில் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் (FTA) நன்மைகள் பற்றியும் தாய்லாந்து தூதுவர் விளக்கமளித்ததுடன், அது பரஸ்பர பொருளாதார நன்மைகளை ஏற்படுத்தும் எனவும் வலியுறுத்தினார். மேலும், இலங்கையில் தாய்லாந்து முதலீட்டை ஊக்குவிப்பதற்காக குறிப்பாக உள்ளூர் பழங்கள் மற்றும் பொருட்களை பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்படும் என கூறினார்.

தாய்லாந்தின் சுற்றுலாத்துறையின் வெற்றிக்கு உதவிய காரணிகள் குறித்து ஜனாதிபதியிடம் எடுத்துரைத்த தாய்லாந்து தூதுவர், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் இலங்கையுடன் ஒத்துழைப்புடன் செயற்பட விருப்பம் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்