Hot Posts

6/recent/ticker-posts

சுவிட்சர்லாந்து தூதர் ஜனாதிபதி சந்திப்பு

Switzerland Sri Lanka relationship

இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் கலாநிதி சிறி வால்ட் (Siri Walt) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி திரு அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தார்.

 ஜனாதிபதித் தேர்தலின் வெற்றிக்கு ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த சுவிஸ் அரசாங்கம் மற்றும் சுவிஸ் மக்கள் ஆகியோரின் வாழ்த்துக்களையும் தூதுவர்கள் கலாநிதி சிறி வால்ட் தெரிவித்தார்.

 இலங்கையில் தற்போது செயற்படும் சர்வதேச நிதியத் திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு ஆதரவளிக்க சுவிட்சர்லாந்து உறுதி பூண்டுள்ளதுடன் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் ஊழலுக்கு எதிரான முயற்சிகளுக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் வலியுறுத்தினார்.

 நேரடி வெளிநாட்டு முதலீடு மற்றும் சுற்றுலாத்துறையில் சுவிட்சர்லாந்தின் நிபுணத்துவத்தை அவர் வலியுறுத்தியதுடன், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் அந்த துறைகளில் இலங்கைக்கு ஆதரவளிக்க முடியும் என்றும் கூறினார்.

 அதேபோன்று, அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் தொழிலாளர் குடியேற்றம் ஆகிய துறைகள் இங்கு சிறப்பு கவனம் பெற்றன, மேலும் அந்த துறைகளில் இலங்கையின் திறன்களை மேலும் மேம்படுத்துவதற்கு சுவிட்சர்லாந்தில் ஆதரவை வழங்குவதாக தூதுவர் திருமதி சிறி வால்ட் உறுதியளித்தார்.

 இலங்கைக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான வலுவான இராஜதந்திர உறவுகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட சுவிட்சர்லாந்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் இலங்கையின் நிலையான அபிவிருத்தி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளின் தரத்தையும் தூதுவர் மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்