சீரற்ற கால நிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி நிதியமைச்சு அதிகாரிகளுக்கு அறிவிப்பு விடுத்துள்ளார். அதற்காக மில்லியன் 50 ஒதுக்கீடு செய்துள்ளார்.
கடந்த சில நாட்களாக அதிக மழை வீழ்ச்சி காரணமாக நாட்டின் பல பாகங்களில் மண் சரிவு மற்றும் வெள்ளத்தால் 6042 மேற்பட்ட குடும்பம் 24,492 மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 117ஐ தொடர்புகொள்வதன் மூலமோ அல்லது 0112136136, 0112136222 அல்லது 0112670002 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலமோ அவசர நிலைமைகளை அறிவிக்க முடியும்.
0 கருத்துகள்