Hot Posts

6/recent/ticker-posts

கந்தளாய் சீனித் தொழிற்சாலை 11,000 ஏக்கர் பயிர்ச் செய்கைக்கு

11,000 acres belonging to Kantale Sugar Company for farmers : New order from President


கந்தளாய் பிரதேசத்தில் அமைந்துள்ள சீனி தொழிற்சாலைக்கு சொந்தமான  11,000 ஏக்கர் காணியை குறுகிய கால பயிர்ச்செய்கைக்காக விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி நேற்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கமைய ஐந்து ஏக்கரை விட குறைவான காணி இவ்வாறு வழங்கப்படவுள்ளதுடன், அதற்கென ஒழுங்கான பொறிமுறைமையொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்ததோடு, எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.

விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம். விக்ரமசிங்க, காணி ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஹேமசிறி லியனகே மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்