கோடி ரூபா 355 வரி செலுத்த தவறிய அர்ஜுன் அலோசியஸ் உட்பட மூவருக்கு 6 மாத சிறைத்தண்டனையில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
நிறுவனத்திற்கு எதிராக உள்நாட்டு வருவாய் திணைக்களத்தால் (IRD) 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 3.5 பில்லியன் வரிகள் அரசாங்கத்திற்கு பாக்கியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு இன்று (14) காலை கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நவம்பர் 14, 2023 அன்று, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நிலுவைத் தொகையை முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி உரிய தொகையை செலுத்த தவறியதால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
0 கருத்துகள்