
ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் தற்போது நடுவில் நிறுத்தப்பட்டுள்ள 11 திட்டங்களின் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜப்பானிய தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி,
- கண்டி நகர நீர் முகாமைத்துவ திட்டம்
- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தித் திட்டம் இரண்டாம் கட்டம்
- டெரஸ்டிரியல் தொலைக்காட்சி ஒலிபரப்பு டிஜிட்டல்மயமாக்கல் திட்டம்
- தேசிய ஒலிபரப்பு மற்றும் விநியோக வலையமைப்பு அபிவிருத்தி திட்டம்
- அனுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டம் கட்டம் 2
- கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டம்
- களு கங்கை நீர் வழங்கல் திட்டம் மற்றும் சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் திட்டம்
விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஜப்பானிய உதவியின் கீழ் இலங்கையில் தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் உள்ள ஹபரணை - வெயாங்கொட ஒலிபரப்புத் திட்டம் மற்றும் அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதற்கட்டப் பணிகளை விரைவாக நிறைவு செய்வது இந்த ஒப்பந்தத்தில் உள்ளடங்குவதாக ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி தெரிவித்தார். அத்துடன் களனி கங்கை புதிய பாலம் நிர்மாணத் திட்டம் தொடர்பான கொடுப்பனவுகள் நிறைவடைந்துள்ளதாக திரு மிசுகோஷி ஹிடேகி கூறியுள்ளார்.
இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் பிரதித் தலைவர் நயோகி கமோஷிதா, முதன்மைச் செயலாளர் ஒஹாஷி கெஞ்சி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்